பட விளக்கம்: பெரம்பலூரில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காந்சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் ராம்சந்திரசேகர் தொடங்கிவைத்து பேசியபோது எடுத்தப்படம்.
பெரம்பலூர் : மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் காந்திசிலை அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராம்.சந்திரசேகரன் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசியதாவது: தமிழகத்தில் டாஸமாக் மதுக்கடைகளை அதிகமாக திறந்துவிட்டுள்ளதால், பொதுமக்கள் பலமடங்கு பாதிப்பிற்கு உள்ளாகிவருகின்றனர்.
மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரிகள், மருத்துவமனைகளை விட மதுபானக்கடைகள் அதிகமாக உள்ளன. மது கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொல்லி நோயாக உருவாகி உள்ளது.
லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கும் மதுவை தமிழ்நாட்டில் இருந்து விரட்டிட மதுவிலக்கை அமல்படுத்திட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒன்றியதலைவர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதே போன்று, அம்மாபாளையம் கிராமத்தில் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தனபால் தலைமை வகித்தார் மாவடட அமைப்பு செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.