பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், காடூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி(38), இவரது மனைவி காயத்ரி(29). இவர்கள் இருவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று கதிர்வேல் (10), தர்ஷினி(8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான சின்னசாமி வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் வழக்காமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது மனைவி காயத்ரிக்கும், சின்னசாமிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இன்று காலை வழக்கம் போல் சின்னசாமி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் ஆத்திரமடைந்த அவரது மனைவி காயத்ரி சின்னசாமியை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சின்னசாமி இன்று காலை 11 மணியளவில் நஞ்சு அருந்திய நிலையில் மயங்கி கிடந்தார். இதுக்குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் சின்னசாமியை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூரில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சின்னசாமி சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். இதுக் குறித்து அவரது மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் குன்னம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!