பெரம்பலூர்: பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் எம்.என். ராஜா தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலர் ஆர். சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகள், சமுதாயச் சீரழிவு குறித்தும் அதனை பூரணமாக விலக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறி, மதுவிற்கு எதிரான கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வட்டார தலைவர்கள் கிருஷ்ண ஜனார்த்தனன், மோகன், இளவரசன், செந்தில்குமார், சித்தார்த்தன், சிவா, பாலு, ரத்னசாமி, சையது பத்தோதின், மாநில பொதுமக்கழு உறுப்பினர் மனோகரன், நகரத் தலைவர் விஜயக்குமார், நிர்வாகிகள் சத்யா, பிரபு, செல்வம், திருமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.