பெரம்பலூர்: மத்திய மாநில அரசு ஊழலை கண்டித்து இடது சாரிகளின் பெருந்திரள் முழக்கப் போரட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் வட்ட செயலாளர்கள் வேல்முருகன் (சிபிஎம்), வக்கீல் இளங்கோவன் (சிபிஐ) ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலளார்கள் ரஜேந்திரன் ( வேப்பந்தட்டை), ஜெய்சங்கர் (குன்னம்), ஆலத்தூர் அமைப்பாளர் ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டக்குழு உறுப்பினர் கருணாநிதி வரவேற்றார்.
பாஜக ஆட்சியில் ஜ.பி.எல் கிரிக்கெட் ஊழல், வியாபம் ஊழல், ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஊழல், பள்ளி மாணவர்களுக்கு உணவு ஒதுக்கீட்டில் ஊழல் மற்றும் அதிமுக ஆட்சியில் சத்துணவுக்கு முட்டை வாங்கியதில் ஊழல், ஆவின் பாலில் தண்ணீர் கலந்து ஊழல், ரேஷன் அரிசியில் தவிட்டு மண் கலந்து ஊழல், அரசு பணிகளுக்கு நியமனம்.
ஊர் மாற்றுதலுக்கு லஞ்சம் ஆகியவற்றை கண்டித்து தமிழகம் தழுவிய சிபிஎம், சிபிஐ கட்சிகள் சார்பில் பெருந்திரள் முழக்கப் போரட்டம் நடந்தது. போரட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் செல்லதுரை, , சிபிஐ மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் சிறப்புரை ஆற்றினார்கள். சி.பி.எம்., சி.பி.ஐ., கட்சி பிரமுகர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு உறுப்பினர் ரெங்கராஜ் நன்றி கூறினார்.