பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையில் உள்ள அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதன்படி நடந்த மனைவி நல வேட்பு விழாவிற்கு மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பத்மாவதி மனைவி நல வேட்பு விழா குறித்தும், பேராசிரியர் மீரா செய்முறைகள் குறித்தும் விளக்கமளித்தனர். சிறப்பு விருந்தினர் ராமலிங்கம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதில் தம்பதிகள் அனைவரும் ஒருவரையொருவர் கையை பிடித்தல், தவம் செய்தல், கயிறு கட்டுதல், புஷ்பம் அளித்தல், கனி சாப்பிடுதல் போன்ற நிகழ்வுகள் நடந்தது. விழாவில் 250க்கு மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் துணை பேராசிரியர்கள் கவிதா, சுந்தர், சாந்தகுமார், கீதா, நிஷா, ஹேமலதா ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக வக்கீல் செந்தில்நாதன் வரவேற்றார். முடிவில் துணை தலைவர் டாக்டர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.