மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் மனித உரிமைகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலா;களும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனித உரிமைகள் நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் “நான் இந்திய அரசமைப்பு சட்டத்தின் வாயிலாகவும், இந்தியாவில் பின்பற்றப்பட்டு, செயல்படுத்தப்படுகிற பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகளின் வாயிலாகவும் பாதுகாக்கப்படுகின்ற அனைத்து மனித உரிமைகளின்பால் உண்மையான மற்றும் மாறாத பற்று உறுதி மிக்கவனாக இருப்பேன். அந்த உரிமைகளை பாதுகாப்பதற்கான என்னுடைய அலுவல்கள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன்.
நான் எவ்வித வேறுபாடுமின்றி மனித உரிமைகளையும் அனைவரின் சுயமரியாதையையும் மதித்து நடப்பேன். நான் என்னுடைய சொல் அல்லது செயல் அல்லது எண்ணங்கள் வாயிலாக பிறருடைய மனித உரிமைகளை நேரிடையாக அல்லது மறைமுகமாக மீறமாட்டேன். மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நான் எப்போதும் கடமை பற்று உறுதி மிக்கவனாக இருப்பேன்” என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அனைத்து அலுவலர்களும் அவரை தொடர்ந்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான் உள்ளிட்ட அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.