பெரம்பலூர் நகரில் உள்ள மரகதம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இன்று காலை ஊதா வண்ண விழாவை மாணவர்கள் கொண்டாடினர்.
ஊதா வண்ண உடை அணிந்த மாணவ, மாணவியர்கள் ஊதா நிறத்தின் சிறப்பு குறித்து நடனமாடியும், உரை நிகழ்த்தியும், பாடியும், மாணவர்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளித் தாளாளர் நிருபா சரவணன் மற்றும் ஆசிரியை மரகதம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சீதாலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.