பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு , மருத்துவ காப்பீட்டுத் திட்ட குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டத் தலைவர் பி. மாயவேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். மருத்துவ மனைகளில் வெளிப்படை தன்மையுடன், மருத்துவமனை செலவுகளை இனவாரியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டம், ஏமாற்று திட்டமாக இல்லாமல் பயனுள்ள திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் ஆர். வேணுகோபால், ஓய்வு பெற்ற ஓட்டுநர் சங்க தலைவர் ஆர். செல்வராஜ், ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சி்த் துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் பி.ஏ. தங்கவேல், ஓய்வுபெற்ற வருவாய் அலுவலர் த. வீரமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க நிர்வாகிகள் எஸ். மகேஸ்வரன், எஸ். தமிழரசன், பொன். மனோகரன், ஆர். மணி, ஆர். பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க நிர்வாகிகள் எஸ். விஜயராமுலு, எம். நாகராஜன், கே. ராஜேந்திரன், பி. செல்வராஜ், ஆர். பரமசிவம், கே. சந்திரகாசன், எ. அப்துல் ரஹ்மான், ஆர். கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்டச் செயலர் ஆர். முருகேசன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பி. கலியமூர்த்தி நன்றி கூறினார்.