பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் மழைகாலத்தில் வரக்கூடிய நோய்களை தடுக்கும் விதத்தில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவ அதிகாரி மருத்துவர் சுந்தரம் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். மருந்தாளுநர் மாதேஸ்வரன் வரவேற்று பேசினார். முகாமில் வெங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் தேவராஜ் ஆகியோர் பேசினார்கள்.
சித்த மருத்துவர்கள் மணிமேகலை, பாரதிபிரியா ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து நிலவேம்பு கசாயம் மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள். இந்த முகாமில் கிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்து 491 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர். சித்த மருத்துவ பிரிவு மருந்தாளுநர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.