பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்து வருகிறது. இந்த புயல்மழைக்கு வேப்பந்தட்டை தாலுக்கா பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெற்குணம் கிராமத்தில் சுமதி , அழகம்மாள், ஜோதிலிங்கம் ஆகியோரது வீடு சேதமடைந்தது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண உதவிகளை பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ தமிழ்செல்வன் வழங்கி அவர்களை அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்து தேவையான உணவு ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமசாமி, வட்டாசியர் தமிழ்செல்வன், வருவாய் அதிகாரி முத்துமுருகன், வேப்பந்தட்டை அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்