வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள சின்னவெங்காயம், மக்காசோளம் மற்றும் பருத்தி வயல்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இன்று பார்வையிட்டார்.
முதலில் பெரம்பலூர் வட்டத்திற்கு உப்பட்ட கே.புதூரில் அதிகப்படியான மழை நீர் தேங்கியதால் வேர்அழுகியதை தொடர்ந்து, சின்ன வெய்காயத்தின் பெருக்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டதையும்,
வேப்பந்தட்டை வட்டத்திற்குப்பட்ட அன்னமங்கலம், அரசலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் பயரிடப்பட்ட மக்காச்சோள வயல்களில் மழையின் காரணமாக ஒடிந்த நிலையில் காணப்பட்ட சோளத்ததையும், வெண்பாவூரில் அதிக அளவில் பயிரிடப்பட்ட பருத்தி வயல்களை பார்வையிட்டு, மழையின் காரணமாக கருகிய நிலையில் உள்ள பருத்தி செடி உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நெல் 5,633 எக்டரிலும், கரும்பு 5,172 எக்டரிலும், பயறுவகை பயிர்கள் 951 எக்டரிலும், பருத்தி 20,383 எக்டரிலும், மக்காச்சோளம் 51,582 எக்டரிலும், இதர தானியப்பயிர்கள் 1,205 எக்டரிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 1,012 எக்டரிலும், சின்னவெங்காயம் 8,120 எக்டரிலும், மரவள்ளி 1,732 எக்டரிலும், மஞ்சள் 676 எக்டரிலும் மற்றும் இதர பயிர்கள் 1,226 எக்டரிலும் மொத்தம் 97,692 எக்டரில் பயிர்சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை சராசரியைவிட அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் பெய்துள்ளதால் மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
10.11.2015 அன்று வீசிய பலத்த சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பாக்கு மற்றும் வாழை பயிர்களை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு வரப்பெற்றுள்ள அரசாணையின்படி 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர;களுக்கு நிவாரணம் வழங்கலாம் என ஆணை வரப்பெற்றுள்ளது. எனவே 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் முதற்கட்ட கணக்கெடுப்பின் விவரம் 19.11.2015 அன்று அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டது.
முதற்கட்ட கணக்கெடுப்பின்படி 210.92 ஹெக்டேர் மக்காச்சோளமும், 1.01 ஹெக்டேர் வாழையும், 0.15 ஹெக்டேர் புடலையும், 1.4 ஹெக்டேர் பாக்கும் ஆக மொத்தம் 219.93 ஹெக்டருக்கு தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி நிவாரண தொகையாக ரூ.16.91 இலட்சம் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவு வரப்பெற்றுள்ளது. இத்தொகை விரைவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் பாதிக்கப்பட்ட விவாசாயிகளின் வங்கி கணக்கின் மூலமாக வழங்கப்படும்.
மேலும் தொடர்மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பருத்தி மற்றும் இதர பயிர் பாதிப்பு குறித்த இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கையும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் கவிமணி, இணை பேராசிரியர் சிவக்குமார், உதவிஇயக்குநர் (தோட்டக்கலை) பெரியசாமி உள்ளிட்ட வேளாண்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.