சென்னையில் ஏற்பட்ட புயல் மழையால் பால் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
மழையால் சென்னை நகரில் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு கூடுதல் விலைக்கு அதை வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து ஆவின் நிறுவனத்தால் தினமும் கொள்முதல் செய்யப்படும் சுமார் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் டாங்கர் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 10 நாள்களாக சென்னை மழையால் துண்டிக்கப்பட்டு, அங்கிருந்து டாங்கர் லாரிகள் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யமுடியவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை வீணாகும் நிலை உருவானது.
நேற்று தாலை, இன்று காலை பால் கொள்முதல் செய்யும் பணியை கூட்டறவு சங்கள் நிறுத்தின. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது பால் கொள்முதல் செய்ய ஆவின் அதிகாரிகளுக்கு உத்தரிவட்டதின் பேரில் வழக்கம் போல் கொள்முதல் செய்யும் பணி துவங்கியது.