பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் கிராமத்தில் விநாயகர், அருள் சக்தி மாரியம்மன் கோவில்கள் உள்ளது.
கூழ் படைத்து வழிபாடு :
இந்த கோவில்களில் அக்கிராமத்தில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள், விவசாய தொழில் சார்ந்தவர்கள் இன்று மாலை மணி அளவில் ஒன்று திரண்டு, அருள் சக்தி மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி வழிபடுதற்காக தங்கள் வீடுகளில் கஞ்சி காய்ச்சி எடுத்து வந்து ஒரு பெரிய பாத்திரத்தில் கோவில் முன் வைத்து நிரப்பி அதனை அருள்சக்தி மாரியம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், படையலிட்ட கூழை பொதுமக்களுக்கு வழங்கினர் .
மூச்சு பிடித்தல் வழிபாடு :
அக்கோவிலின் அருகிலேயே உள்ள விநாயகர் கோவில் வாசற்படியில் களிமண்ணை உயரமாக கொட்டி கருவறையை நீரால் நிரப்பி மூச்சு பிடித்தல் வழிபாடு நடத்தினர். இதனால், மழை பெய்யும் என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கையாகும்.
பல ஆண்டுகளாக மழை பொய்த்து விவசாயம் பாதிக்கும் போது விவசாயிகள் ஒன்றுகூடி வழிபாடு நடத்துவது காலம் காலமாக, தொன்று தொட்டு நடந்து வருவதாக தெரிவித்தனர்.