மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வயது வரம்பின்றி ஆண்,பெண் இருபாலாருக்கும் இன்று (11.12.2015) காலை 9.00 மணி முதல் பெரம்லூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

sportzஇப்போட்டிகளில் ஆண்கள்-240 நபர்கள், பெண்கள் – 120 நபர்கள் மொத்தம் 360 நபர்கள் கலந்துகொண்டனர். கூடைப்பந்து, மற்றும் கையுந்து பந்து ஆகிய போட்டிகள் ஆண்களுக்கு மட்டும் நடைபெற்றது.

தடகளப்போட்டிகள் 100மீ, 200மீ, 800மீ, 3000மீ, ஓட்டப்போட்டிகள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெற்றது. நீச்சல் போட்டிகள் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ ப்ரீ ஸ்டைல், 50 மீ பேக் ஸ்ட்ரோக், 50 மீ ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீ பட்டர்ப்ளை ஸ்ட்ரோக் மற்றும் 200 மீ இன்டிவிஜூவல் மிட்லே ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

ஆண்களுக்கான தடகளப்போட்டியில் 100 மீ ஓட்டப்போட்டியில் பி.மேஷாக், தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், 200 மீ ஓட்டப்போட்டியில் கே.மொகம்மது ஜாபர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடத்தையும், 800 மீ ஓட்டப்போட்டியில் எஸ்.அஜிதா, ராஜவிக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், 3000 மீ ஓட்டப்போட்டியில் எஸ்நவீன், ரோவர் பொறியியல் கல்லூரி முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் எழிலரசன், தந்தை ரோவர் கல்லூரி முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் எளம்பலூரைச் சேர்ந்த பி.தர்மதுரை, முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் எளம்பலூரைச் சேர்ந்த எஸ். ஸ்ரீதர் முதலிடத்தையும், பெற்றனர். ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் சி.பி.சி. கிளப், பெரம்பலூர் எ அணி முதலிடத்தை பெற்றனர். கையுந்து பந்து போட்டியில் மாஸ் பெரம்பலூர் அணி முதலிடத்தை பெற்றனர்.

ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் 50 மீ ப்hP ஸ்டைல் போட்டியில் எம்.விஜயகுமார், தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடத்தையும், 100 மீ ப்ரீ ஸ்டைல் போட்டியில், பெரம்பலூரைச் சேர்ந்த பி.ராம்குமார் முதலிடத்தையும், 200 மீ ப்ரீ ஸ்டைல் போட்டியில் எளம்பலூரைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீதர் முதலிடத்தையும், 400 மீ ப்ரீ ஸ்டைல் போட்டியில் பி.மோகன்ராஜ் களரம்பட்டி, ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், 50 மீ பேக் ஸ்ட்ரோக் மற்றும் 50 மீ ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டிகளில் எம்.நவீன், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, முதலிடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான 100 மீ ஓட்டப்போட்டியில் எம்.தேன்மொழி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், 200 மீ ஓட்டப்போட்டியில் ஒய். ஆரோக்கியா எபிசியா டெல்சி. புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், 800 மீ ஓட்டப்போட்டியில் ஆர்.கீதா, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், 3000 மீ ஓட்டப்போட்டியில் ஆர்.கிருத்திகா – புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் என்.நாகப்பிரியா – புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் என்.நாகப்பிரியா – புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் எ.நிரோஷா-தந்தை ரோவர் பொறியியல் கல்லூரி முதலிடத்தையும், பெற்றனர்.

இப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.இராம சுப்பிரமணியராஜா பதக்கங்களும், சான்றிதழ்களையும் வழங்கினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!