பெரம்பலூர் : கிருஷ்ணகிரியில் வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் மாநில அளவிலான சிறுமியர் சாம்பியன் கபாடி போட்டியில் கலந்து கொள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில் அணி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 50-பள்ளியிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில அமைச்சூர் கபாடி அமைப்பு சார்பில் வரும் 19,20,21 -ஆகிய தேதிகளில் மாநில அளவிலான 16-வயதுக்குட்பட்ட சிறுமியர்களுக்கானசாம்பியன் கபாடிப்போட்டி நடக்கவுள்ளது.
இதில் மாநிலத்தில் 32-மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து பங்கேற்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொள்ளும் வீராங்கனைத் தேர்வு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதாத்தில் நடைப்பெற்று வருகின்றது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.