பெரம்பலூரில் மாநில அளவில் நடைப்பெற்ற சப்ஜீனியருக்கான கபடிப்போட்டியில் பெரம்பலூர் அணியை வென்று விழுப்புரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழகமும் பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகமும் இணைந்து நடத்தும் தமிழ்நாடு சப்ஜூனியர் சிறுவர்கள்கான மாநில 27 வது சம்பியன் ஷிப் கபடி போட்டி கடந்த24-ந்தேதி துவங்கியது.பெரம்பலூர் பனிமலர்மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில்,
இந்த போட்டியில் பெரம்பலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், மதுரை, கோவை, காஞ்சிபுரம் உள்பட 31 மாவட்ட கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
லீக்கம்நாக்அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டி இன்று மாலை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
இன்று மாலை நாடைப்பெற்ற இறுதிப்போட்டியில் பெரம்பலூர் அணியும் விழுப்புரம் அணியும் மோதியதில்,17-க்கு 15-என்ற புள்ளிகள்அடிப்படையில் விழுப்புரம் அணி முன்னிலைப்பெற்று சாம்பியம் பட்டத்தை வென்றது