பெரம்பலூர் : மாநில சீனியர் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் கபடிபோட்டியில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட அணிக்கு 17வீராங்கனைகள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அமெச்சூர் கபடிக்கழகத்தின் சார்பில் சீனியர் பெண்களுக்கான மாநில 63வது சாம்பியன்ஷிப் கபடி போட்டி வரும் 23ம்தேதி முதல் 25ம் தேதிவரை தேனியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணி சார்பில் கலந்து கொள்ளும் பொருட்டு மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகத்தின் சார்பில் தகுதியான வீராங்கனைகள் தேர்வுமுகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அதன் தலைவர் முகுந்தன் தலைமையிலும், அமைப்பு செயலாளர் ராசு, இணைச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன், ரமேஷ், சண்முகதேவன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதில் கல்லூரி, பள்ளிகளை சேர்ந்த கபடி வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில்உடற்கல்வி இயக்குநர்கள் கோபி, பிரபாகரன்,
அறிவேல், சாந்தி, கனகா, கஜேந்திரன் ஆகியோர் தகுதியின் அடிப்படையில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவிகள் சுடரொளி, ரசிகா, மோனிஷா, வினிதா, காயத்ரி, வைத்தீஸ்வரி, ரோவர் கல்லூரி மாணவி சங்கீதா, சாரதாதேவி கல்லூரி மாணவி பாலசுந்தரி, சிந்து, முத்துலெட்சுமி, கல்பனா,அன்னலெட்சுமி, அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கீர்த்தனா, முத்து, கார்த்திகா, நிர்மலா, சுந்தரி ஆகிய 17 வீராங்கனைகளை தேர்வு செய்தனர். இவர் மாநில கபடி போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணியினராக கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.