பெரம்பலூர்: பெரம்பலூரில் ஆகஸ்ட் 10 ஆம்தேதி நடைபெறவுள்ள இந்திய கம்யுனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிதியளிப்பு விழாவில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
அதை முன்னிட்டு பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற பேரவைக்ககூட்டத்திற்கு சிபிஎம் வட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை, ஆர்.அழகர்சாமி, பி.ரமேஷ், கலையரசி, இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிபிஎம் மாநிலக்குழு எம்.சின்னதுரை சிறப்புரை ஆற்றினார்.
கட்சியின் நிதி வழங்குவது, மாநில செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பெரம்பலூர், ஆலத்தூர்,குன்னம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மாவட்டக்குழு, வட்டக்குழு, கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என பேரவைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மாவட்டக்குழு எ.கணேசன், அன்பழகன், ஏ.கே.ராஜேந்திரன் ஒன்றிய செயலாளாகள் வேப்பந்தட்டை சுப.தங்கராசு குன்னம் ஜெய்சங்கர் வட்டக்குழு ஆர்.முருகேசன், பி.கிருஷ்ணசாமி, சி.சண்முகம், காமராஜ், லெட்சுமி கிளைசெயலாளர்கள் வஸந்தா, கஜேந்திரன், சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.