பெரம்பலூர் அருகே உள்ள சிறுவயலூரில் இருந்து திமுக அதிமுக கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் கிராமத்திலிருந்து 10 க்கும் மேற்பட்டோர் திமுக, அதிமுக கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
வட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்த கே.முத்துலிங்கம், எம்.திருவண்ணாமலை, எம்.பாபு, என்.ஜெயலட்சுமி, பி.ராஜலட்சுமி, எம்.ராஜகுமாரி, மற்றும் பிச்சைமுத்து, ரெங்கராஜ், அழகம்மாள், சங்கர், உள்ளிட்ட 10 பேருக்கு துண்டு அணிவித்து அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டக் குழு எஸ்.பி.டி.இராஜாங்கம் எ.கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக் குழு எம்.கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.