பெரம்பலூர் : வேப்பூர் ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் – 224 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறன் உடையோருக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட குழந்தை முதல் -18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று (27.7.2015) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் அறிவழகன் காது மூக்கு தொண்டை மருத்துவர் அன்பரசன் கண் மருத்துவர் காயத்ரி, குழந்தைகள் நல மருத்துவர் நவீன் மற்றும் மனநல மருத்துவர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கண் பரிசோதகர் ராஜலிங்கம் , செவி பரிசோதகர் மரு.கோவிந்தராஜ் மற்றும் அலிம்கோ நிறுவன பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்று, அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும் பரிசோதித்தனர்.
இந்த சிறப்பு முகாமில் மொத்தம் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். உதவி உபகரணங்கள் பெற கீழ்க்கண்டவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக கண்டறியப்பட்டனர்.
இவர்களுக்குள் 11 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை கண் கண்ணாடி 6 மாணவர்களுக்கு , 2 மாணவர்களுக்கு சக்கர நாற்காலி, முடநீக்கியல் சாதனம் 15 மாணவர்களுக்கும், செயற்கைக் கால் 1, செவித்துணைக்கருவி, 6 மாணவர்களுக்கு கார்னர் சீட், 1 மாணவர்க்கு மற்றும் மாதாந்திர உதவித்தொகை , கல்வி உதவித்தொகை தேவைபடுபவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
அறுவை சிகிச்சைக்காக 4 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு காக்ளியார் அறுவை சிகிச்சைக்காக செவித்திறனை பரிசோதனை செய்வதற்கு 5 மாணவர்கள் செய்ய தேர்வு செய்யப்பட்டனர்.
இச்ச்சிறப்பு மருத்துவ முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், ஆர்.எம்.எஸ்.ஏ. உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் காமராஜ் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலதி, உதவி திட்ட பணியாளர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்கள், கலந்துகொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வேப்பூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், மற்றும் இயன்முறை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.