மாற்றுத் திறனாளிகளுக்கான பட்டதாரி (அ) இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் (அ) இடைநிலை ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதியாக இடைநிலை ஆசிரியர் (Deaf, Blind, Hearing impaired) (அ) பட்டதாரி ஆசிரியர் (B.Ed) Junior Diploma in Teaching (Deaf, Blind, Hearing impaired) மற்றும் Senior Diploma in Teaching (Deaf, Blind, Hearing impaired) தொழில் கல்வித்தகுதியை முடித்திருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான வயது வரம்பு ஏதுமில்லை.
இப்பணிக்காலியிடத்திற்கு மாநில அளவு பதிவுமூப்பில் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளதால் தகுதியுள்ள பெரம்பலூர் மாவட்ட பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியினை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் 27.10.2015-க்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்றுகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும், என அதில் தெரிவித்துள்ளார்.