பெரம்பலூரில் உள்ள தேமுதிக மாவட்ட தலைமை கழகத்தில் தேமுதிக பெரம்பலூர் மாவட்ட மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்க்கு மாவட்ட மகளிரணி செயலாளர் வைரமணி ராஜேந்திரன் தலைமை வகித்ததார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில மகளிரணி செயலாளர் சிவகாமி முத்துக்குமார் பேசியதாவது:
வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டதிலுள்ள அனைத்து வாக்குசாவடியிலும் 5 மகளிர் கொண்ட பூத்கமிட்டி அமைக்க வேண்டும்.
அதேபோல் ஊராட்சிக்கு ஒரு மகளிரணி செயலாளர் நான்கு மகளிரணி துணைசெயலாளர் வீதம் அனைத்து ஊராட்சிகளுக்கும் அமைக்க வேண்டும்.
மாவட்டத்தில் மகளிரணி உறுப்பினர்கள் அதிகமாக சேர்க்க வேண்டும் என்றும் சிறப்புரையாற்றினார். பின்னர் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் சாந்திராஜ், சத்தியா ஒன்றிய நிர்வாகிகள் செல்வராணி, கலைச்செல்வி, முத்துலெட்சுமி, நகர நிர்வாகிகள் தமிழரசி, நந்தினி, அம்சவள்ளி மற்றும் மகளிரணி நிர்வாகிகளும்,
மாவட்டஅவை தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.கண்ணுசாமி,சிவகுமார் ,செயற்குழு உறுப்பினர் செல்லபிள்ளை ,பொதுகுழு உறுப்பினர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் வாசுரவி, சிவாஐயப்பன, சாமிதுரை, மலர்மன்னன்,மாவட்ட மாணவரணி செயலாளர்கள் முத்தமிழ் செல்வன் உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர் .