பெரம்பலூரில் உள்ள ரோவர் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இன்று குத்துவிளக்குற்றி துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் பெரம்பலூர; மாவட்டத்தை சேர்ந்த 110 பள்ளிகளை சேர்ந்த 503 மாணவர்கள் தங்களின் 319 படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இதில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளின் படைப்புகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும், அவற்றின் மூலம் சமுதாயத்திற்கு ஏற்படபக்கூடிய நன்மைகள் குறித்தும் மாணவ, மாணவிகளிடையே கேட்டறிந்தார்.
மேலும் நாம் உருவாக்கக்கூடிய அனைத்து படைப்புகளும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பயன்பட வேண்டும். மேலும் படிக்கும் வயதில் இத்தகைய கண்டுப்பிடிப்புகளை உருவாக்க பெரிதும் உருதுணையாக இருந்த உங்களின் ஆசிரியரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கண்காட்சியில் சுகாதாரம், சத்துணவு, புதுப்பிக்கதக்க வளம், தொழிற்சாலைகள், விவசாயம், உணவுபாதுகாப்பு, பேரிடர; மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
6 முதல் 8 வகுப்பு வரையிலான பிரிவில் மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் பள்ளி மாணவன் சரத்குமாரின் தானியங்கி தெருவிளக்கு எரியும் படைப்பு முதலிடத்தையும், உலக அளவிலான நீர் மாசுப்படுதல் என்ற தலைப்பில் அறிவியல் கண்டுபிடிப்பை காட்சிப்படுத்திய தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவன் சிவசங்கர் இரண்டாம் இடத்தையும், ஒளிமின் விளைவு தொடர்பாக வி.களத்தூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம்.முகிபுல்லா, எஸ்.பிரதீப் ஆகியோரின் படைப்பு மூன்றாமிடத்தையும் பெற்றது.
9 மற்றும் 10 ம் வகுப்பிற்கான பிரிவில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவன் ஏ.யூசூப்பின் பவர் ஜெனரேசன் தொடர்பான படைப்பு முதலிடத்தையும், தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவன் சத்தியபாமாவின் இந்தியாவின் கனவு தொடர்பான படைப்பு இரண்டாமிடத்தையும், ஜமீன் பேரையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நிஷாந்தி மற்றும் காவ்யாவின் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொடர்பான படைப்பு மூன்றாமிடத்தையும் பெற்றது.
11 மற்றும் 12 வகுப்பு பிரிவில் தனலெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்ள்ளி மாணவன் கிஷோர் கோபிகிருஷ்ணாவின் தண்ணீரைசேமிப்பது தொடர்பான படைப்பு முதலிடத்தையும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் தேவேந்திரனின் கொசு வளர்ச்சியை தடுப்பதில் மீன்களின் பங்கு தொடர்பான படைப்பு இரண்டாமிடத்தையும், கீழமாத்தூர் அரசு(மாதிரி) மேல்நிலைப்பள்ளியின் நிலநடுகத்திலிருந்து மக்களை காப்பாற்றுவது தொடர்பான படைப்பு மூன்றாமிடத்தையும் பெற்றது.
அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் செல்வசிகாமணி ஆசிரியரின் படைப்பு பிரிவில் சிறப்பு பரிசினை பெற்றார்.
அறிவியல் கண்காட்சியில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர; கலந்து கொண்டனர்.