பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் 14ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 2015-2016-ஆம் ஆண்டிற்கு ஜஸலை மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளான தடகளம், நீச்சல், கையுந்துபந்து மற்றும் கைப்பந்து ஆகிய போட்டிகள் வரும் 14ம் தேதியன்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் காலை 8.00 மணியளவில் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு நடைபெற உள்ளது.
மாணவர்களுக்கு 100 மீ, 400 மீ, 1500 மீ, குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 4 X 100 மீ தொடர் ஓட்டம், ஆகிய தடகளப் போட்டிகளும்,
மாணவிகளுக்கு 100 மீ, 600 மீ, 1500 மீ, குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 4 X 100 மீ தொடர் ஓட்டம், ஆகிய தடகளப் போட்டிகளும்,
மாணவ, மாணவியர் இருபாலாருக்கும். 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ ப்ரி ஸ்டைல், 50 மீ பேக் ஸ்ட்ரோக், 50 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீ பட்டர்ப்பளை ஸ்ட்ரோக் மற்றும் 200 மீ இன்டிவிஜுவல் மிட்லே. ஆகிய நீச்சல் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
போட்டி விதிமுறைகள் :
விளையாட்டுப் போட்டி காலை 8.00 மணிக்கு துவக்கப்படும். தாமதமாக வரும் வீரர்கள், வீராங்கனைகள் போடட்டியில் பங்கேற்க அனுமதிக்க இயலாது.
இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் நுழைவுப் படிவத்தை 14.07.2015 அன்று காலை 8.00 மணிக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
இப்போட்டிகளில் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம் அலைபேசி எண். 9443376054 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.