பெரம்பலூர் : மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 08.10.2015 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தகவல் தெரிவித்துள்ளார்.
கால் ஊனமுற்றோருக்கு 50 மீ ஓட்டமும், கை ஊனமுற்றோருக்கு 100மீ ஓட்டமும், குள்ளமானவர்களுக்கு 50 மீ ஓட்டமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீ சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்படவுள்ளது.
மேலும் குழுப்போட்டிகள் ஷட்டில் பேட்மின்ட்டன் ஒற்றையர் மற்றும் இரட்டையா; போட்டியில் 5 நபர்களும், குழுப்போட்டிகளில் டேபிள் டென்னிஸ் குழுவிற்கு 2 நபா;களும் கலந்து கொள்ளலாம்.
முற்றிலும் பார்வையற்றோர்களுக்கு 50மீ ஓட்டமும், குண்டு எறிதல் போட்டியும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீ ஓட்டமும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், சாப்ட் பால் எறிதல் போட்டியும், குழுப்போட்டிகளில் அடாப்டட் வாலிபால் போட்டியும் நடத்தப்படவுள்ளது. இதில் ஒரு குழுவிற்கு 7 நபர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
ஐக்யு (IQ – Intelligence Quotient) தன்மை முற்றிலும் இல்லாதோருக்கு 50 மீ ஓட்டமும், சாப்ட் பால் எறிதல் போட்டியும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், ஐக்யு தன்மை நல்ல நிலையில் இருப்போருக்கு 100 மீ ஓட்டமும், மிகக்குறைந்த பார்வையற்றோருக்கு சாப்ட் பால் எறிதல் போட்டியும், குழுப்போட்டியில் எறிபந்து ஒரு குழுவில் 7 நபர்களும் கலந்து கொள்ளலாம்.
காது கேளாதோர்களுக்கு 100 மீ ஓட்டமும், 200 மீ ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டமும், குழுப்போட்டியில் கபாடி ஒரு குழுவில் 7 நபர்களும் பங்கு பெறலாம்.
மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்க வயதுவரம்பு ஏதுமில்லை. ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் வரவேற்கப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.