பெரம்பலூர்: பெரம்பலூர் தேமுதிக மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேமுதிக மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நாளை (ஜுலை.08)காலை 10 மணி அளவில் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெறுகிறது.
நகர மகளிர் அணி செயலாளர் தமிழரசி வரவேற்கிறார். மாநில மகளிரணி செயலாளர் டாக்டர்.சிவகாமிமுத்துக்குமார் சிறப்புரை ஆற்றுகிறார்.
அது சமயம் மாவட்ட, ஒன்றியம், நகரம், பேரூர், கிளை கழகத்தை சேர்ந்த மகளிர் அணியினர், கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.