பெரம்பலூர் : மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இக்குழுவின் தலைவரும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதராஜா தலைமையில், இணைத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகாசி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டுத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகள், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம், ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், பிரதமந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை துறை மூலம் அமைக்கப்பட்ட சாலைகள், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க செயல்பாடுகள் குறித்து தேசிய சமூக பாதுகாப்புத்திட்டம் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டம் மைய அரசின் சிறப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த திட்ட திட்டங்களின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், முடிந்துள்ள பணிகள் குறித்தும், இனிவரும் காலங்களில் என்னென்ன பணிகள் செய்யப்பட இருக்கிறது என்பன போன்ற விவரங்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.சகுந்தலா, ஊரக வளர;ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், ஒன்றிக்குழுத்தலைவர்கள் ஜெயக்குமார்(பெரம்பலூர்), கிருஷ்ணகுமார்(வேப்பூர்), வெண்ணிலா (ஆலத்தூர்), ஜெயலட்சுமி (வேப்பந்தட்டை) துறை சார்பான அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.