பெரம்பலூர் :பெரம்பலூர் அருகே திடீரென சாலையை கடக்க முயன்ற மினி லாரியும் கல்லூரி
பேருந்தும் மோதி கொண்ட விபத்தில் 3 மாணவர்கள் உட்பட 6 பேர் லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று 55 மாணவர்களுடன் இன்று காலை அரியலூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி கவுல்பாளையம் அருகே வந்து கொண்ருந்தது. அப்போது அப்பகுதியில் திடீரென சாலையை கடக்க முயன்ற 407 மினி லாரியும் கல்லூரி பேருந்தும் மோதிக் கொண்டது.
இதில்,மூன்று கல்லூரி மாணவர்களும், மினி லாரியில் வந்த அபினேஷ் என்பவர் உட்ட மூன்று பேரும் என மொத்தம் 6 பேர்கள் லேசான காயமடைந்து பெரம்பலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்திற்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, பேருந்து ஓட்டுநரான அரியலூரைச் சேர்ந்த பாக்கியராஜ்(53), மற்றும் மினி லாரி ஓட்டுநரான பேரளி கிராமத்தை சேர்ந்த தங்கராசு(55) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
நல்வாய்ப்பாக எவ்வித பெருத்த சேதமும் ஏற்படவில்லை.