பெரம்பலூர்: பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நவம்பர் 2015க்கான மின்கம்பி உதவியாளர் தகுதி காண் தேர்வுக்கு விண்ணப்பங்கள் 12.10.2015 முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு விண்ணப்பத்தின் விலை ஒன்று ரூ.10, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 05.11.2015. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தைப் பெற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் அவர்களை நேரிலோ அல்லது 04328 – 290590 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என கல்லூரி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.