பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலம் இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் டேவிட் மகன் பிரான்சீஸ் நெப்போலியன்,(35), பெயிண்டரான இவர் துறைமங்கலம் சிவன்கோயில் தெருவில் உள்ள நேரு என்பவரது வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.
பிரான்சீஸ் நெப்போலியனும், நேரு மகன் சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்த இரண்டாவது மாடியிலிருந்து பிளக்ஸ் போர்ட்டை கீழே இறக்கியுள்ளனர்.
அப்போது பிளஸ்க் போர்ட் கட்டிடத்தின் மேலே சென்ற உயரழுத்த மின் கம்பத்தில் மோதியது. இதில் பிரான்சீஸ் நெப்போலியன், சரவணன் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த பிரான்சிஸ் நெப்போலியன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரான்சிஸ் நெப்போலியன் இறந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.