பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் பெரியசாமி (21). இவர், இன்று காலை அவரது வீட்டில் மின் விசிறியை இயக்குவதற்காக சுவிட்சை அமுக்கி உள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பெரியசாமி துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த கை.களத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது சடலத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, அவரது தாய் தமிழ்செல்வி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.