பெரம்பலூர்: பெரம்பலூர் புறவழிச்சாலையில் கோனேரிப்பாளையம் அருகே உள்ள ஆத்தூர் சந்திப்புச் சாலையில் ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்குகள் கடந்த பல நாட்களாக ஒளிராமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது.
துறையூர், கரூரில் இருந்து வரும் வாகனங்களும், சென்னை மற்றும் பிற பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களும், பெரம்பலூர் நகரில் இருந்து ஆத்தூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கடந்து செல்வதில் மட்டுமில்லாமல், நான்கு புறமும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் ஒளிர்வதால் முன், மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் வாகனங்கள் கண்டறிவதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதனால் விரைவாக பழுதான மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.