வடகிழக்கு பருவமழை பெய்து வருவதை முன்னிட்டு பொதுமக்கள் இயற்கை இடபாடு மற்றும் மின் விபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள, தேவையான விழிப்புணர்வோடும் மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் செயல்படுவது அவசியம் – மின்வாரியம்
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வளர்மதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதை முன்னிட்டு பொதுமக்கள் இயற்கை இடர;பாடு மற்றும் மின் விபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள, தேவையான விழிப்புணர்வோடும் மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். அதன்படி இடி அல்லது மின்னலின்போது டி.வி மிக்ஸி கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த கூடாது.
திறந்த நிலையில் உள்ள ஐன்னல், கதவு அருகில் இருப்பதை தவிர்த்து பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர வேண்டும். சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை இயக்கும் போது ஈர கையுடன் இயக்குதல் கூடாது. கால்நடைகளை மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கட்ட கூடாது. மழைகாலங்களில் மின்மாற்றிகள் மின்கம்பங்கள் மின்பகிர்வுப் பெட்டிகள் வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லவேண்டாம்.
ரெப்பிரிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும், மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ளுவயல ஒயா;களின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தாத வேண்டாம். இடி மின்னலின்போது தஞ்சம் அடைய மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தோ;ந்தெடுக்க வேண்டும். மின்சாரத்தினால் ஏற்படும் தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் பொதுமக்கள் விழிப்புணர்வோடும் மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் செயல்பட்டு மின்விபத்துக்களை தவித்து, விலைமதிப்பில்லா மனித உயிர்களை காத்திட வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார;.