பெரம்பலூர்:மியான்மரில்(பர்மாவில்) அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுவதை கண்டித்தும்,
இப்பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்திட
வலியுறுத்தியும்
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குதரத்துல்லா தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் முஹம்மதுஇலியாஸ், மாவட்ட துணைச்செயலாளர் ஜமீர்பாஷா,
மாவட்ட துணைச்செயலாளர்கள் ஹயாத்பாஷா, நூர்முஹமஙமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தி, த.மு.மு.கவினர் மியான்மரில்(பர்மாவில்) அப்பாவி
முஸ்லீம்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இப்பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் கோஷங்கள்
எழுப்பினர்.
சிறப்பு அழைப்பாளராக தலைமைக்கழக பேச்சாளர் அப்துல்ரஹ்மான்தாவத்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் த.மு.மு.க நிர்வாகிகள் சுல்தான்மொய்தீன், மீராமொய்தீன்,
முஹம்மதுநஜீம், முஹம்மதுரபீக் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நகரச்செயலாளர் ஜலாலுதீன் வரவேற்றார். முடிவில் முன்னாள்
நகரச்செயலாளர் முஹம்மதுஹனீபா நன்றி கூறினார்.