பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் பல பள்ளிகள், மற்றும் கல்லூரிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர், பெண்களுக்கான போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றனர். இரண்டாம் இடத்தினை மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெற்றனர்.
ஆண்களுக்கான பூப்பந்து போட்டியில் ஸ்ரீலாஸ்ரீ கிளப் சேர்ந்தவர்கள் முதலிடத்தையும், இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு சீருடைகள் வழங்கப்படும் என்றும்,
மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அலுலர்கள் தெரிவித்தனர்.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப்பெறும் அணிகளுக்கு தலா ரூ.10,000- ரூ.7,500-, ரூ.5,000- , ரூ.3,000- என பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தனர்.