ரஜினி மக்கள் மன்றத்தின் முதல் மாநாட்டை நடத்துவது பற்றி போயஸ் கார்டன் வீட்டில் மன்றத்தின் நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடனும், 38 மாவட்ட செயலாளர்களுடனும் ரஜினி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், கோவையில் அடுத்த மாதம் ரஜினி மக்கள் மன்றத்தின் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலா இசைவெளியீட்டு விழாவில் நேரம் வரும்போது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நல்ல காலம் பிறக்கும் என தெரிவித்த ரஜினி கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் முதல் மாநாட்டை நடத்துவது பற்றி போயஸ் கார்டன் வீட்டில் மன்றத்தின் நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினி ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.