பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்ஜிஆர் நகரைச்சேர்ந்தவர்கள் நெடுஞ்செழியன்(53), ஹரிதாஸ்(48) ஆகிய இருவரும் நண்பர்கள்,
பெரம்பலூரில் இருந்து எளம்பலூருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்றுள்ளனர். மது அருந்திய அவர்கள் போதையிலேயே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். செங்குணம் பரிவு சாலை அருகே முன்னே சென்ற டிராக்டரின் பின்பகுதியில் மோதினர். இதில் இருவருக்கும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.