பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 27). இவர் நூத்தப்பூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் நெற்குணத்தை சேர்ந்த பொன்னுசாமி (45) என்பவருக்கும் கமலக்கண்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கமலக்கண்ணன் இன்று நெற்குணம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது பொன்னுசாமி, அவரது உறவினர் செல்வம் (35) ஆகிய இருவரும் சேர்ந்து கமலக்கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கமலக்கண்ணன் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுசாமி, செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.