மாநில மாநாட்டில் பேசுகிறார் மாநிலச் செயலர் பழனியப்பன். மாநில பொருளாளர் நாகராஜன், மாவட்டச் செயலர் பி. தயாளன் ஆகியோர் உள்ளனர்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை முழு சுகாதார திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை முழு சுகாதார திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ராஜேஷ்கண்ணா தலைமை வகித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. ராஜபூபதி முன்னிலை வகித்தார்.
மாநில பொருளாளர் நாகராஜன், மாநிலச் செயலர் பழனியப்பன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலர் பி. தயாளன் ஆகியோர் கோரிக்கைகள் விளக்கி பேசினர்.
இந்த மாநாட்டில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் மகேந்திரன், தருமபுரி மாவட்டம், மரப்பூர் கருணாநிதி, நாகை மாவட்டம், கீழ்வேலூர் சிவக்குமார் ஆகியோர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவிப்பது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை முழு சுகாதார திட்டத்தில் பணிபுரிந்து வரும் வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இடைக்கால நிவாரணமாக தமிழகம் முழுவதும் பணியாற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ. 17 ஆயிரமும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ. 22 ஆயிரமும், கணினி இயக்குநர்களுக்கு ரூ. 11 ஆயிரமும் வழங்க வேண்டும்.
களப்பணியாற்றும் போது விபத்து மற்றும் உயிரிழக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தமிழக அரசின் குடும்ப நல நிதி திட்டத்தில் இணைக்கப்பட்டு சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனஇச்சாமி, நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில், மாவட்ட பொதுச்செயலர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் அ. செல்வராசு வரவேற்றார். மாவட்டச் செயலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.