பெரம்பலூர் : முழு மது விலக்கு அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெரம்பலூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் சிவாஜி மூக்கன், தேனூர் கிருஷ்ணன், அரணாரை சுந்தர்ராஜ், செந்தில், ராஜேந்திரன், செங்மலை, இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் வேப்பூர் நிர்வாகிகள் ராமசாமி, சேகர், ராஜசேகரன், வேப்பந்தட்டை நிர்வாகிகள் தங்கவேல், சின்னராஜ், இளையபெருமாள், அருணாசலம், சுந்தர்ராஜ், சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.