பெரம்பலூர்: திமுக கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத் திட்டத்தில் பெரம்பலூர், அரியலூரில் உள்ள பொதுமக்களை சந்தித்து உரையாடுகிறார்.
பெரம்பலூர்:
இன்று நாமக்கல் பயணத்தை முடித்து வரும் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை காலை 9 மணி அளவில் பெரம்பலூர் நகரில் நடைப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிகிறார்.
காலை 9.30 மணி: மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடுகிறார்.
காலை 10.00 மணியளவில் வாலிகண்டபுரத்தில் உழவர்களுடன் உரையாடுகிறார்.
காலை 10.30 மணிக்கு லப்பைக்குடிக்காடு இஸ்லாமியர்களுடன் உரையாடுகிறார்.
காலை 11.30 மணிக்கு படித்த வேலையில்லாத பட்டதாரிகளிடம் கலந்துரையாடுகிறார்.
மதியம் 12.30 மணிக்கு குன்னத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுடன் பேசுகிறார்.
பின்னர், மதியம் அரியலூர் சென்று மதிய உணவு அருந்துகிறார்.
அரியலூர் :
மாலை 5.00 மணிக்கு அரியலூர் நகரில் நடைப்பயணம், பொதுமக்களுடன் உரையாடல் மேற்கொள்கிறார்.
மாலை 6.00 மணிக்கு அரசு சிமிட்டி ஆலை தொழிலாளர்களுடன் பேசுகிறார்.
மாலை 6.30 மணிக்கு தத்தனூர் பகுதி உழவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
ஜெயங்கொண்டம்:
மாலை 7மணிக்கு ஜெயங்கொண்டம் நகரில் நடை பயணிக்கிறார் அப்போது பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை 8 மணிக்கு நெசவாளர்களுடன் கலந்து உரையாடுவதாக பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.