பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூரில் இன்று தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் சிறப்பு மருத்துவ முகாமில் மகப்பேறுக்கென்று தனிப்பிரிவு, ஸ்கேன் மற்றும் இரத்தப்பரிசோதனைகள் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மகப்பேறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தை சிகிச்சைக்கு தனிப்பிரிவு, ஆண்கள் 40 வயதுக்குக் கீழ் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், பெண்கள் 40 வயதுக்கு கீழ் மற்றும் 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என பிரித்து தனித்தனியாக சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்; திருச்சி ஹர்சமித்ரா புற்றுநோயாளிகள் சிகிச்சை மருத்துவமனை, திருச்சி சிதார் கல்லீரல் மாற்று மற்றும் இறப்பை அறுவை சிகிச்சை மருத்துவமனை, மகாத்மா – கண் மருத்துவமனை, ராயல்பேர்ல் மருத்துவமனை, பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவகல்லூரி மருத்துவமனை ஆகிய நிறுவனங்களை சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டனா;.
இந்த முகாமில் ஆண்கள்-539, பெண்கள்-594, குழந்தைகள்-53 உள்பட மொத்தம் 1186 பேர்கள் கலந்து கொண்டனா;. 132 கா;ப்பினி பெண்களுக்கு ஸ்கேன் பாரிசோதனையும், 532 நபர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை, உப்பு, இரத்தசோகை , 312 நபா;களுக்கு சிறுநீர் பரிசோதனை, 160 பெண்களுக்கு கர்பப்பை வாய் புற்றுநோய் பாரிசோதனை, 145 நபர்களுக்கு கண்புறை நோய் பரிசோதனை, 32 நபர்களுக்கு பல் சிகிச்சை, 271 நபர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் உயர்சிகிச்சை பயன்பெற 31 நோயாளிகளை உயர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.