20151101
பெரம்பலூர்: தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களின் கீழ், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் மேலமாத்தூர் மற்றும் கீழமாத்தூர் ஊராட்சிய சேர்ந்நத ஆயிரத்து320 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா கிரைண்டர், மிக்சி, மற்றும் மின்விசிறிகளை தனித்துணை ஆட்சியர் தலைமையில், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மேலமாத்தூர் ஊராட்சிக்குட்ப்பட்ட 784 இல்லதரசிகளுக்கும், கீழமாத்தூர் ஊராட்சிக்குப்பட்ட 536 இல்லத்தரசிகளுக்கும் வழங்கப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், பெரம்பலூர் நகர் மன்ற தலைவருமான ஆர்.டி.இராமசந்திரன், ஒன்றியக் குழுத்தலைவர் வெண்ணலா, திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இயக்குநரும், ஆலத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளருமான என்.கே.கர்ணன், ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து(கீழமாத்தூர்), தமிழரசிபெரியசாமி(மேலமாத்தூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!