பெரம்பலூர்: குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளியின் சேர்மன் சாந்திராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயாராஜாசிதம்பரம், பொருளாளர் மங்கையர்கரசி முத்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வரலாற்றுத்துறை ஆசிரியர் பிரான்சிஸ்சேவியர் கல்வியின் பெருமையை உணர்த்தும் வகையில், காமராஜரின் கல்வி பணிகள் குறித்து பேசினார். விழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் பரிசு வழங்கி பாராட்டினார்.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவர்கள் ஊமை நாடகம் நடத்தினர். உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.