பெரம்பலூர் மாவட்டத்தில் மேல்நிலைத் தனிதேர்வர்கள் விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஆக. 12) முதல் சேவை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நடந்து முடிந்த மேல்நிலைப் பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ,மாணவிகளுக்கு உடனடித்தேர்வு நடத்தப்பட்டது. அதிலும் தேர்ச்சி பொறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் செப்டம்பர் – அக்டோபர் 2015 மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களுக்கு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகளுக்கு புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, தனித்தேர்வர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று ஆன் லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துகொள்ளலாம்.