முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:
04.03.2016 முதல் 01.04.2016 முடிய நடைபெறவுள்ள மேல்நிலை அரசு பொதுத் தேர்வு 24 தேர்வு மையங்களில் 4418 மாணவர்கள் 4374 மாணவிகள் என மொத்தம் 8792 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வு மையத்திற்கு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளராக 32 தலைமையாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் 24 தேர்வு மையத்திற்கும் துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலராக 33 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வினாத்தாட்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல 8 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வுக்கு அறைக் கண்காணிப்பாளராக 521 ஆசிhpயர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இத்தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற 62 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் இத்தேர்வு பணியில் 656 ஆசிhpயர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் 32 தலைமையாசிரியர்கள், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர் 33 ஆசிரியர்கள், வழித்தட அலுவலர்கள் 8 பேருக்கும் மற்றும் அறை கண்காணிப்பாளர் 521 ஆசிரியர்களுக்கும் பறக்கும் படை உறுப்பினர் 62 ஆசிரியர்களுக்கும் 01.03.2016 மற்றும் இன்று (02.03.2016) ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சிகள் மற்றும் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்ட நெறிமுறைகளை விளக்கத்துடன் எடுத்துக் கூறப்பட்டதுடன், அதனை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான முறையில் தோ;வுகள் நடைபெறுவதற்கு காவல் துறை மூலம் அனைத்து தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அலைபேசி (கைபேசி)யை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.