பெரம்பலூர் : வரும் மே.1 அன்று மே தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களுக்கு விடுமுறை என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் மதுகூடங்கள் ஆகியவற்றிக்கு வரும் 01.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மே தினத்தை முன்னிட்டு விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.