பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே, மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி அன்பரசி (29). இவர், தனது கணவன் சக்திவேலுடன் பெரம்பலூரிலிருந்து சிறுவாச்சூருக்கு மோட்டார் சைக்கிளில் இன்று மதியம் சென்றுகொண்டிருந்தார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள தீரன்நகர் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்த அன்பரசி பலத்த தலையில் காயமடைந்தார். சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.