மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 102ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி அடைந்ததற்கு அணியின் இணை உரிமையாளர் ஷாரூக் கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.
ஐ.பி.எல் டி-20 தொடரின் 41வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில், மும்பை இண்டியன்ஸ் அணியிடம், கொல்கத்தா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கொல்கத்தாவின் மோசமான தோல்விக்கு அந்த அணியின் இணை உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாரூகான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், வீரர்களிடம் உத்வேகம் குறைவாக இருந்ததாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.