ரயில்வே தொழிலாளர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கத தலைவர் கண்ணையை வலியுறுத்தி உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே தொழிலாளர்கள் நாடு முழுவதும் அறவழி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக சென்னை சென்ட்ரலில் தொடர் உண்ணாநிலை மேற்கொண்டுள்ள ரயில்வே ஊழியர்களின் மத்தியில் சங்க தலைவர் கண்ணையா சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆதாயம் அடையும் விதமாக மத்திய அரசு தொழிலாளர் நல சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இருப்பதாக தெரிவித்தார்.புதிய விதியின்படி குறிபிட்ட காலம் மட்டுமே தொழிலாளர்கள் பணி புரிய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு தனது தொழிலாளர் விரோத போக்கை மாற்றி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருவதாகவும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் தாங்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு மதிப்பளித்து , ரயில்வே ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு தங்களது கோரிக்கைக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். —